Tuesday, July 26, 2005

 

Chandramukhi

Image hosted by Photobucket.com

சந்திரமுகி : திரைப்பட விமர்சனம் அல்ல. எண்ணற்ற ப்ளாகர்கள் ஏற்கனவே இத்திரைப்படத்தை விமர்சித்து விட்டார்கள்.

இத்திரைப்படத்தை 102 நாள்கள் தொடர்ச்சியாக பார்த்து வித்தியாசமான சாதனை புரிந்துள்ளார் கோவை ரசிகர் முத்து(22 வயது). இந்த ரெக்கார்ட் பிரேக் செய்தி நேற்றய தினமணியில் வந்ததாகும்.

முத்து என்பவர் கோவையில் ஒரு காய்கறி கடையில் வேலை செய்கிறார். ராம்நகரில் உள்ள குமரன் திரையரங்கில் தினமும் சந்திரமுகியைப் பார்த்துள்ளார். இந்த படம் 100 நாள்கள் ஓடும் என்றும்; நான் தினமும் உங்கள் திரையரங்கில் வந்து பார்த்துவிட்டு வருகையை பதிவு செய்வேன் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் 50 நாள்கள் நிறைவடைந்தபொழுது எஞ்சிய 50 நாள்களுக்கான இலவச அனுமதி டிக்கெட்டை திரையரங்க நிர்வாகம் வழங்கியுள்ளது. இவற்றையும் தாண்டி மேலும் 2 நாள்கள் முத்து மீண்டும் இத்திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார். குமரன் திரையரங்கத்தின் முதல் திரைப்படம் என்பதால் இந்த சலுகையினை வழங்கியதாக நிறுவனத்தினர் தெரிவிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார், ஜோ, பிரபு, வாசு போன்றோர்கூட செய்யாத சாதனையை இந்த முத்து செய்திருக்கிறார். இதனால் என்ன பயன்? சொல்ல முடியாது- முத்துவுக்கு, சென்னையில் நடக்கும் "சந்திரமுகி" விழாவில் கேடையம்கூட கிடைக்காலாம்.

Friday, July 22, 2005

 

ShOrT MeSsAgE SeRvIcE (SMS)

பார்வேர்ட் ஆகும் ஈ மெயில் போல் இந்த எஸ்.எம்.எஸ். சூப்பர் ஸ்டார் மாதிரி எப்படி, எங்கிருந்து வரும் என்றே தெரியாது; ஆனால் வரவேண்டிய நேரத்திற்கு சரியாக வந்து சேரும். (யார்தான் மெனக்கெட்டு முதலில் டைப் செய்கிறார்களோ என்று ஒரு ரிஸர்ச் ஸ்டடி கூட செய்யலாம்!!)

நாளொன்றுக்கு என் மொபைலுக்கு பல எஸ்.எம்.எஸ்கள் வந்த வண்ணமிருக்கும். அதில் நேற்று வந்த ஒரு அழகான எஸ்.எம்.எஸ் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

BEWARE OF MARRIAGE:

Life b4 marriage is AIRTEL - u can "Express Yourself"
After marriage is RELIANCE- "Always Get in Touch"
After Honeymoon is HUTCH- "Wherever u go ur Wife's network follows"
After 10 yrs of married life is BSNL - " Subscriber can't be reachable"

Thursday, July 21, 2005

 

Silk Saree

Image hosted by Photobucket.com


எப்படியாவது கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெறவேண்டும் என்று பலர் பலவாராக முயன்று கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் RmKV ஜவுளிக்கடல் மீண்டும் கின்னஸில் இடம்பெற ஒரு சாதனையைச் செய்திருக்கிறது. அதாவது ஐம்பத்து நாலாயிரத்து அறுநூறு (54,600) வண்ணங்கள் கொண்ட ஆறு கெஜம் சேலையை நெய்திருக்கிறார்கள். இதில் 105 x 520 என்று சிறிய கட்டங்களுடன் அத்தனை வண்ணங்களுடன் காட்சியளிக்கிறது. சென்ற வருடம் உலகின் மிக நீள பட்டுச் சேலை - 702 அடி நீளம் நெய்து சாதனை புரிந்தார்கள்.

இந்த சாதனையைச் செய்ய மிகச் சிரத்தையுடன் கணிப்பொறி உதவியுடன் ஒரே வண்ணங்கள் இல்லாமல் செய்ததாகக் கூறுகிறார் திரு.K.விஸ்வநாதன்(RmKV). இச்சேலையின் எடை 1.30கிலோ கிராம் (850 கிராம் பட்டு மற்றும் 450 கிராம் சரிகையின் கலவையில்) உருவாக்கியிருக்கிறார்கள். முதலில் ஆறு சேலைகள் தயாராக இருப்பதாகவும்; மேலும் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களுக்கேற்ப நெய்து தருவதாகவும், இச்சிறப்பம்ச சேலைக்கு ஐம்பதாயிரம் ரூபாயை விலையாக நிர்நயத்திருப்பதாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருக்கிறார் திரு. K.சிவகுமார்(RmKV).

சென்ற வாரத்தில் ஒரு விளம்பரம். நடிகை ஜோதிகா - எந்த கலரில் புடவை எடுக்கலாம்? என்று எல்லோரிடமும் கேட்பார். இந்த சேலைக்குத்தான் இவ்வளவும் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. இந்த சேலையுடன் இப்போது விளம்பரத்திலும் வருகிறார் ஜோ.

இச்செய்தியின் குறிப்பை ஒரு பத்திரிகையிலிருந்து எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது வாசலில் ஒரு பெண் கிழிந்த சேலையுடன் ஐயா! தர்மம் பண்ணுங்க சாமி! என்ற குரல் ஒலித்தது

This page is powered by Blogger. Isn't yours?