Friday, March 10, 2006

 

HATS OFF

பெண் பேருந்து ஓட்டுனரை மகளிர் மட்டும் திரைப்படத்தில்தான் பார்த்திருக்கிறேன். இன்று 12-B பேருந்து நிறுத்தமான வடபழனியில் ஏறினேன். ஏறிய ஐந்தாவது நிமிடத்தில் டிக்கெட் கொடுப்பவர் வந்து டிக்கெட் கொடுத்தார். அடுத்ததாக சுடிதார் அணிந்த பெண்மணி ஹேண்ட் பேக்குடன் ஏறினார். நேராக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார். சிலர் (என்னைப்போல்) ஒரு நிமிடம் அச்சர்யத்துடன் பார்த்தார்கள். அடுத்த விநாடி பேருந்தை ஸ்டார்ட் செய்து கீரை போட்டு கிளப்பினார்.

ஒரு பெண் கனரக வாகனம் ஓட்டுவதென்பதே ஒரு ஆச்சர்யமான விஷயம்தானே! அதுவும் எவ்வித தய்க்கமின்றி, பயமுமின்றி. ஆனால் நம்மூரில்தான் வெறும் வாயையே மெல்லுவார்களே; அவல் கிடைத்தால் நாக்கைக்கூட கடித்துக்கொண்டு மெல்லுவார்களே! கமெண்ட் அடிப்பதற்கு குறைச்சலா என்ன?

* இன்னாப்பா இது டொர் டொர்ன்னு மாட்டு வண்டி கணக்கா போவுது.
* இதுங்க வண்டி ஓட்டி நம்ம போக வேண்டியிருக்கு ம் என்ன செய்ய !
* மச்சி இன்னிக்கு டைமுக்கு காலேஜ் போகமுடியாதுடா?
* வண்டி முழுவதும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அட்டகாசம் - விசில் அடிப்பதும், தாளம் போடுவதுமாக..

இத்தனைக்கும் வண்டி அந்த பீக் ஹவரிலும் நன்றாகத்தான் போனது. சிங்காரச் சென்னையின் சாலையைப்பற்றி சொல்லவும் வேண்டுமோ? திடீரென்று ஆலயம்மன் கோவில் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டுட்ரா·பிக் போலிஸை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அவர் பங்கிற்கு ஏதோ கத்திவிட்டு வண்டியை எடுக்கச்சொல்லிவிட்டார்.

ஒருவழியாக திருமயிலை வந்ததும் நான் இறங்கிவிட்டேன். Hats off to that lady.

This page is powered by Blogger. Isn't yours?