Thursday, March 03, 2005
. The 77th Oscar Awards:
முன்னுரை/அறிமுக உரை
வணக்கம். வலைதளம் என்னும் கடலில் என்னுடைய முதல் சிப்பி. இன்று முதல் (03.03.2005) என்னுடைய எண்ணங்கள், அனுபவங்கள், குமுறல்கள், இன்பங்கள் இன்னும் பலவற்றை பதிய வைக்க ஆவலுடன் உள்ளேன்.
All the world's a stage,
And all the men and women merely players:
- William Shakespeare
சினிமா உலகத்தினரின் விருது ஆசையை பூர்த்தி செய்வது "ஆஸ்கார்"தான். விருதில் "மேற்கத்திய சாயம்" பூசப்பட்டிருந்தாலும் இன்றளவில் சினிமா துறைக்கு மணிமகுடம் சூட்டும் ஒரே விருதாக விளங்குகிறது.
Feb. 27, 2005, ஞாயிற்றுக்கிழமை, அஸ்வினி நட்சத்திரம், சங்கடஹர சதுர்த்தி கூடிய தினத்தில் ஹாலிவுட் உலகின் ஒரு மைல்கல். அமெரிக்காவின் அழகிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெற்றது ஆஸ்கர் விருது விழா.
விருது பட்டியலில் சில...
சிறந்த படம் : மில்லியன் டாலர் பேபி
சிறந்த இயக்குநர் : கிளின்ட் ஈஸ்ட்வுட் (மில்லியன் டாலர் பேபி)
சிறந்த நடிகர் : ஜேமி பா·க்ஸ் (ரே)
சிறந்த நடிகை : ஹிலாரி ஸ்வாங்க் (மில்லியன் டாலர் பேபி)
சிறந்த வெளிநாட்டு படம் : தி சீ இன்சைட் (SPAIN)
சிறந்த ஆடை அலங்காரம் : சாண்டி பாலெல் (THE AVIATOR)
ஹிலாரி ஸ்வாங்க், இதன் மூலம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை இரண்டு முறை பெற்ற நடிகைகளின் பெருமைமிகு பட்டியலில் இவரும் சேர்ந்தார். இதற்கு முன், "BOY'S DON'T CRY" என்ற படத்துக்காக இவ்விருதைப் பெற்றார்.
சிறந்த இயக்குநருக்கான விருது பெற்ற கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு 74 வயது. இவரும் இரண்டாவது முறையாக இவ்விருதை பெற்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் விருது கிடைத்த படம், இவரே தயாரித்து இயக்கிய "அன்பர்கிவன்" (Unforgiven) 1993.
விழாவின் மற்றுமொரு சிறப்பம்சம், இந்த 74 வயது இளைஞரின் தாயார் விழாவில் பங்குகொண்டு சிறப்பித்தார். அவருடைய வயது 96.
குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய தயாரிப்பாளர் அஸ்வின் குமாரின் 'LITTLE TERRORIST'க்கு விருது கிடைக்கவில்லை. ஆன்ட்ரேவின் "WASP" அதை பறித்துக் கொண்டது.