Thursday, June 30, 2005

 

Share Auto

ஷேர் ஆட்டோவில் பயணம் என்றால் பொடிசுகள் முதல் பெரிசுகள் வரைக்கும் அலாதி பிரியம்தான். நான் கூட விரும்புவேன்; ஏனென்றால் மிதி படாமல், இடி படாமல் செல்லலாம் என்ற ஒரு அல்ப ஆசை.

நேற்று அலுவலகத்தைவிட்டு வீட்டிற்கு 12-Bல் செல்லாமல் அஷோக் பில்லர் வழியாக சென்றேன். அப்படி சென்றதால்தான் ஒரு பிரமிப்பூட்டும் விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அஷோக் பில்லரிலிருந்து போரூர் வரை பத்து ரூபாய் என்று ஒரு சொகுசான ஷேர் ஆட்டோ வந்து நின்றது(காலியாக). நான் அதிகமாக கேட்கிறானே என்று நினைப்பதற்குள் ஒருவர் முந்திக்கொண்டு ஏம்பா! ஐந்து ரூபாய்க்கு வரமாட்டியா? என்றார். ஆமாங்க! உங்களுக்கு இமயமலைக்கே போனால்கூட ஐந்து ரூபாய்தானா? இஷ்டம் இருந்தா ஏறுங்க; இல்லைன்னா விடுங்க! என்றான் ஆட்டோக்காரன். (நல்லவேளை நாம் பாட்டு வாங்கவில்லை என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.)

என்ன சார்! நீங்க வரீங்களா? என்றான். நான் தயங்கியவாறு எவ்வளவு என்றேன்.
சார்! விருகம்பாக்கம் வரை ஐந்து ரூபாய்; பிறகு போரூர் வரை பத்து ரூபாய் வரீங்களா, இல்லையா? சீக்கிரம் சார்-ஒரு முடிவு எடுங்க..
நான் யோசிப்பதற்குள் ஒருவர் ஏறி இடம்பிடித்துவிட்டார்; மனமில்லாமல் நானும் ஏறிவிட்டேன். வழியில் யாரும் ஏறாமல் ஆட்டோ பறந்தது. வழியேர எனக்கு ஒரே போதனைமயம். அவை பின்வருமாறு:-

* ஏன் சார்! நான் எவ்வளவு நியாயமாகக் காசு கேட்டேன்; ஏன் சார் தயங்குனீங்க?
* நான் மற்றவர்களைப்போல் அடாவடியாகவா கேட்டேன்; இல்லை திட்டினேனா?
* இனிமேல் இப்படி செய்யாதீங்க சார்! பில்லரிலிருந்து போரூர் வரை பத்து ரூபாய் அதிகமா என்ன?
* சார்! நான் மற்றவர்களைப்போல் எதிர் வாடையில் பலகைக்கூட போடவில்லை பாருங்கள்; எனக்கு மனுஷனை மதிக்கத்தெரியும்; மூன்றிலிருந்து நான்கு பேருக்கு மேல் நான் ஏற்றுவதே கிடையாது சார்!

நாங்கள் இருவரும் மட்டுமே பயணித்தோம். நான் இறங்கும் பஸ் ஸ்டாப் வருகையில்-டிரைவர் பஸ் ஸ்டாப்பில்தான் நிறுத்துவேன் என்று எதாவது கொள்கை வைத்துள்ளீர்களா? இல்லை சிக்னலில் இறங்கலாமா? என்றேன். அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்- நீங்க எங்க சொல்றிங்களோ அங்க நிறுத்தறேன் என்றான். அவசர அவசரமாகக் காசு கொடுத்துவிட்டு சிக்னலில் இறங்கி எதிரில் பார்க்கிறேன்...

பின்புறம் நான்கு பயணிகள்; அவர்களுக்கு எதிர்த்தாற்போல் நான்கு பயணிகள்(பலகையில்);துவாரபாலகர்கள்போல் டிரைவரின் இருபக்கங்களிலும் பயணிகள் என்று ஒரு ஷேர் ஆட்டோ வேகமாக உருண்டுக்கொண்டு வந்தது. பிறகுதான் என் போதனை குரு ஆட்டோவில் போதித்தது நினைவுக்கு வந்தது.

Saturday, June 25, 2005

 

Mail-Inbox-Forward-Sign out

என்னடா இது! ப்ளாகிற்கு வந்த சோதனை-என்று நினைக்கவேண்டாம்.

இது பல பேருக்குத் தெரியாத விஷயமாகக்கூட இருக்கலாம்.

ஒரு ·பார்வர்டான மெயிலிலிருந்து...

RESUME

EDUCATION /Qualification:

Stood first in BA (Hons), Economics, Punjab University, Chandigarh,
1952; Stood first in MA (Economics), Punjab University, Chandigarh,
1954; Wright's Prize for distinguished performance at St John's College, Cambridge, 1955 and 1957; Wrenbury scholar, University of Cambridge, 1957; DPhil (Oxford), DLitt (Honoris Causa); PhD thesis on India's export competitiveness

OCCUPATION /Teaching Experience:

Professor (Senior lecturer, Economics, 1957-59;
Reader, Economics, 1959-63;
Professor, Economics, Panjab University, Chandigarh, 1963-65; Professor, International Trade, Delhi School of Economics,University of Delhi,
1969-71; Honorary professor, Jawaharlal Nehru University,New Delhi,
1976 and Delhi School of Economics, University of Delhi,1996 and Civil Servant

Working Experience/ POSITIONS:

1971-72: Economic advisor, ministry of foreign trade

1972-76: Chief economic advisor, ministry of finance

1976-80: Director, Reserve Bank of India; Director, Industrial
Development Bank of India; Alternate governor for India, Board of
governors, Asian Development Bank; Alternate governor for India, Board of governors, IBRD

November 1976 - April 1980: Secretary, ministry of finance (Department of economic affairs); Member, finance, Atomic Energy Commission; Member, Finance, Space Commission

April 1980 - September 15, 1982: Member-secretary, Planning Commission

1980-83: Chairman, India Committee of the Indo-Japan joint study
committee September 16, 1982 - January 14, 1985: Governor, Reserve Bank of India

1982-85: Alternate Governor for India, Board of governors,
International Monetary Fund

1983-84: Member, economic advisory council to the Prime Minister

1985: President, Indian Economic Association

January 15, 1985 - July 31, 1987: Deputy Chairman, Planning Commission

August 1, 1987 - November 10, 1990: Secretary-general and commissioner, south commission, Geneva

December 10, 1990 - March 14, 1991: Advisor to the Prime Minister on
economic affairs

March 15, 1991 - June 20, 1991: Chairman, UGC

June 21, 1991 - May 15, 1996: Union finance minister

October 1991: Elected to Rajya Sabha from Assam on Congress ticket

June 1995: Re-elected to Rajya Sabha

1996 onwards: Member, Consultative Committee for the ministry of finance

August 1, 1996 - December 4, 1997: Chairman, Parliamentary standing
committee on commerce

March 21, 1998 onwards: Leader of the Opposition, Rajya Sabha

June 5, 1998 onwards: Member, committee on finance

August 13, 1998 onwards: Member, committee on rules

Aug 1998-2001: Member, committee of privileges 2000 onwards: Member,
executive committee, Indian parliamentary group

June 2001: Re-elected to Rajya Sabha

Aug 2001 onwards: Member, general purposes committee

BOOKS:

India's Export Trends and Prospects for Self-Sustained Growth -Clarendon Press, Oxford University, 1964; also published a large number of articles in various economic journals.

OTHER ACCOMPLISHMENTS:

Adam Smith Prize, University of Cambridge, 1956

Padma Vibhushan, 1987

Euro money Award, Finance Minister of the Year, 1993;

Asia money Award, Finance Minister of the Year for Asia, 1993 and 1994

INTERNATIONAL ASSIGNMENTS:

1966: Economic Affairs Officer

1966-69: Chief, financing for trade section, UNCTAD

1972-74: Deputy for India in IMF Committee of Twenty on International Monetary Reform

1977-79: Indian delegation to Aid-India Consortium Meetings

1980-82: Indo-Soviet joint planning group meeting

1982: Indo-Soviet monitoring group meeting

1993: Commonwealth Heads of Government Meeting Cyprus 1993: Human
Rights World Conference, Vienna

RECREATION:

Gymkhana Club, New Delhi; Life Member, India International Centre, New Delhi


Name: Dr Manmohan Singh

DOB: September 26, 1932

Place of Birth: Gah (West Punjab)

Father: S. Gurmukh Singh

Mother: Mrs Amrit Kaur

Married on: September 14, 1958

Wife: Mrs Gursharan Kaur

Children: Three daughters

Our Prime Minister seems to be the most qualified PM all over the world.

Monday, June 13, 2005

 

Shock News Continuation….

நான் ஒன்றாம் தேதி (Shock News)ல் கூறிய இளைஞன் இவன்தான்.
இவன் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய "எதிரி" திரைப்படத்தில் மாதவனுடன் நடித்திருக்கிறான்.

Image hosted by Photobucket.com

மலர்வு:25-10-1984
உதிர்வு:31-05-2005

 

Small Nap

நான் முதுநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, வகுப்பில் கடைசி பெஞ்சில் ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த கண்டிப்பான டீன் அவனை வகுப்பறையிலிருந்து வெளியேற்றி அப்பாவை அழைத்துவந்தால்தான் உன்னை மீண்டும் வகுப்பறைக்குள் அனுமதிப்பேன்
என்று திட்டி வழியனுப்பி வைத்தார்.

Image hosted by Photobucket.com

Working at it: Law ministers of various states have a quiet nap during the All-India law ministers and law secretaries conference in Shimla on Saturday.(PTI)

போட்டோ உபயம்: நேற்றைய க்ரானிக்கல்

இவர்களை யார் அப்படி செய்வது...?

Thursday, June 09, 2005

 

Peak Hour Bus

Image hosted by Photobucket.com


சென்னை மாநகரிலே, மாநரகப் பேருந்தில் பயணம் செய்வதென்பது (அதுவும் பீக் ஹவர்ஸில்) சொல்லவும் வேண்டுமோ? ஏன் இந்த நிலைமை? அரசாங்கம் ஏன் அதிகமான அக்கறை காட்டமல்இருக்கிறது? என்னுடைய கற்பனையில் சிங்காரச் சென்னையின் பேருந்து....

*காலை மற்றும் மாலை வேளைகளில் குறிப்பிட்ட பள்ளிகள் இருக்கும் இடத்திற்கு (நான்கு/ஐந்து) பள்ளிகள் ஒருசேர இருக்கும் இடத்திற்கு சில பேருந்துகள் தனியாக - அதாவது மாணவர்களுக்காக மட்டுமே இயக்கலாம்.

*மாநரகப் பேருந்தை எதிர்ப்பார்க்காமல், வேலைக்குச் செல்லும் சில அரசாங்க ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து வேனில் பயணிக்கிறார்கள்.

*இதனை அரசாங்கமே சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பாக பேருந்தை இயக்கலாம்பேருந்து எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் வரலாம்; ஆனால் பேருந்தில் கணிசமாக கூட்டம் குறைந்திருக்கும்.

*ஒரேடியாக மூன்று பேருந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக இயக்குவதைவிட சராசரியாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்தாக இயக்கலாம்.

*ஷேர் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்கள் நிறைய வந்தாலும் பேருந்தில் நெரிசல் மட்டும்குறையவேயில்லை.

*குறிப்பாக ஒரு பேருந்து நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு செல்ல தனியாக மேம்பாலங்களோ, சாலைகளோ அமைக்கலாம்.

*சகட்டுமேனிக்கு எஸ்.எம்.எஸ் போட்டி நடத்தும் வானொலிகள்,தொலைக்காட்சிகள் இந்த விஷயத்தை ஆராய்ந்து அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கலாம்

*இப்படியெல்லாம் சிந்திக்காமல் மற்றவர்களை குறை கூரியே காலத்தைக் கழிக்கிறார்கள்நம் அரசாங்கத்தினர்.

Wednesday, June 08, 2005

 

Mobile’O Phobia

செல்பேசியைப் பற்றி...

பொதுவாக எனக்கு வரும் ஈ-மெயில்கள் தகவல் களஞ்சியங்களாகத்தான் இருக்கும்; அனானிமஸ்கூட அப்படித்தான் அனுப்புவார்கள். சமீபத்தில் அப்படி வந்த ஒரு மெயில் (அனானிமஸ் அல்ல): திகிலும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

பெங்களூரில், ஒரு மருத்துவமனையில் நான்கு வயது சிறுமி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறக்கவில்லை; மாறாக யாரோ பயன்படுத்திய செல்பேசியினால் இறந்திருக்கிறாள். அந்த மெயிலை தமிழாக்கப்படுத்துவதைவிட அப்படியே ஆங்கிலத்தில் படித்தால் எளிதில் பொருள் விளங்கும். மேற்கொண்டு படியுங்கள்.....This is a real incident that happened in a local hospital in
Bangalore. A four year old girl was admitted due to leg fracture. As it was an open fracture, she had to undergo an operation to stitch the protruding bone back in place. Though it was quite a minor operation, she was hooked on to life support system, as a part of the process. The doctors had to input some data prior to the operation to suit different conditions. Thereafter, the operation proceeded. Half way through the process, the life support system suddenly went dead.

The culprit: Some one was using his/her hand- phone outside the
operation theatre.. And the frequency had affected the system. They
tried to track the fellow but to no avail. The little girl, young and innocent as she was, died soon after. Sad to say, she was an only child.

Message: "Be compassionate! Please do not use your mobiles especially at hospitals or within the Aircraft or any places where you are told not to use it.

You might not be caught in the act, but you might have killed someone without knowing. Sometimes it's a matter of Life & Death....!!!!

Please pass this to as many, since most of us are just not aware of
the seriousness of this issue.

Wednesday, June 01, 2005

 

Shock News

நேற்று அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு சென்றவுடன் ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
என்னுடைய தூரத்துச் சொந்தக்காரரின் மகன்(வயது 21) விபத்தில் இறந்ததாக செய்தி வந்தது.

சென்ற செவ்வாய் அன்று காலை 6.30 மணிக்கு டென்னிஸ் விளையாட சென்ற மகன் வீடு திரும்பினான் உயிரற்று.

காலை வேளை, போக்குவரத்து நெரிசல் கூட இல்லாத நேரம் பல்சரில் சென்ற இளைஞன் மீது கார் மோதி வண்டியிலிருந்து எகிறி பத்து அடிக்கு தூக்கியெறியப்பட்டு மீண்டும் காரின் மீதே விழுந்திருக்கிறான். விழுந்த வேகத்தில் மூளைப் பகுதியில் பலத்த அடிப்பட்டு உடம்பே முறுக்கலாகி விட்டதாம். ஒரு வார காலமாக நினைவில்லாமல் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை உயிர் பிரிந்துவிட்டது.

இதை படிப்பவர்கள் தயவு செய்து வண்டியில் செல்லும்போது (அடுத்த தெருவே இருந்தாலும் கூட) தவறாமல் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

This page is powered by Blogger. Isn't yours?