Saturday, November 19, 2005

 

Guinness Record

எது எதற்கோ கின்னஸ் ரெக்கார்ட் செய்கிறார்களே; அன்றாடம் சென்னைவாசிகள் ஐம்பது பேர் பயணிக்கக்கூடிய மாநரகப் பேருந்தில் இருநூறு பேருக்கு மேல் பயணிக்கிறார்களே இதை ஏன் கின்னஸ்ஸில் சேர்க்கக்கூடாது? மாநரகப் பேருந்து பயணம் என்பதே ஒரு பிரம்ம பிரயத்தனம்தானே!

நேற்று முன் தினம் கூட்டம் நிறைந்த பேருந்தில் கஷ்டப்பட்டு ஏறி உள்ளே சென்றுவிட்டேன்; பாழாய்ப்போன பயணச்சீட்டு எடுப்பதற்கு காசு கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள்; நான் அடுத்த ஸ்டாப்பில் எறங்குனங்க! வேற யாரிடமாவது கொடுங்க ப்ளீஸ்! என்கின்றனர். ஒரு ஸ்டாப்பிங் கடந்தேவிட்டது; அவரும் இறங்கவில்லை, நானும் பயணச்சீட்டும் வாங்கியபாடில்லை. சார், நீங்க இறங்கனாக்கூட பரவாயில்லை; காசைக் கொடுத்திடுங்க, நான் வாங்கிக்கிறேன்னு சொல்லி காசை ஒரு வழியாகக் கொடுத்துவிட்டு, ஐந்து நிமிடம் கழித்து அவரே சீட்டைக் கொடுத்தார் (அவர் இறங்கவேயில்லை). போனால் போகட்டும் என்று அவருக்கு ஆங்கிலத்தில் நன்றி சொல்லிவிட்டுப் பார்த்தால் பாதி சீட்டுதான் இருக்கிறது; முக்கியமான எண்கள் உள்ள மேல் பகுதியைக் காணவில்லை. யாரை நொந்துகொள்வது?! நம் போறாத வேளை பச்சைக்கிளி பச்சையம்மா காலையில் சொன்னதுபோல ஏதாவது நஷ்டம் ஆனால் என்ன செய்வது? மீண்டும் காசு கொடுத்து முழுமையான பயணச்சீட்டைப் பெற்றேன்.

Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?