Thursday, September 22, 2005

 

S.P. Balasubrahmanyam

என்னுடைய அலுவலக நண்பர் ராஜகோபாலின் உதவியால் நேற்று மாலை 7.15 மணிக்கு சத்யம் காம்ப்ளக்ஸிலுள்ள ஸ்ரீ அரங்கில் பாடகர் SPB உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். உடன் உரையாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் சத்யம் சினிமாஸின் லைட்ஸ் ஆன் அமைப்பு. பொதிகை அலைவரிசையில் ஏற்கெனவே அவர் பேட்டிகளில் கூறியவற்றைதான் நேற்றும் பகிர்ந்துக்கொண்டார். அவருடைய மிகப்பெரிய வருத்தம் என்று "உன்னிடம் மயங்குகிறேன்" பாடலை தனக்கு பாடக்கிடைக்காமல் யேசுதாஸ் பாடியதாகக் கூறினார். இது மட்டும் எனக்கு புதிய செய்தி.

SPB பற்றி சில தகவல்கள்:
* டிசம்பர் மாதம் 1946ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர்.
* இதுவரை 36,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
* ஒன்பது மொழிகளில் 40 ஆண்டுகளாக பாடிக்கொண்டிருக்கிறார்.
* விருதுகள்: சங்கராபரணம் - 1979, ஏக் துஜே கேலியே - 1981, கலைமாமணி - 1981, சாகர சங்கமம் - 1983, ருத்ர வீணா - 1988, கான யோகி பஞ்சஷாரி காவை - 1995, மின்சார கனவு - 1996, பத்மஸ்ரீ - 2001, ஆந்திர மாநில அரசு விருது - 10, தமிழக அரசு விருது - 3 இன்னும் பலப்பல.

இதில் வேடிக்கை என்னவெனில் லைட்ஸ் ஆன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் லைட்ஸே இல்லை; அரங்கமே மணிரத்னம் திரைப்படம் பார்ப்பதுபோல இருந்தது. கடைசி நிமிடத்தில் விளக்குகள் காலை வாரிவிட்டதாம்.

Comments:
விஜய்

புகைப்படம் எடுத்தீர்களா? எடுத்திருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா>?

நன்றி/
சுந்தர்.
 
இன்று பின்னுக்கு ஒதுக்கப்பட்ட நல்ல கலைஞர்களில் தலையாயவரும் இவர் தான். தமிழிசையுலகம் சீக்கிரம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்
 
சாரி சுந்தர்,
கேமராவுடன் செல்லவில்லை...
 
ஏன் கணேஷ், பின்னுக்கு ஒதுக்கப்பட்டவர் என்று நினைக்கிறீர்கள்? அரங்கமே கூட்டத்தில் நிறைந்திருந்தது; நான் அசந்துவிட்டேன்!
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?