Thursday, July 21, 2005
Silk Saree
எப்படியாவது கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெறவேண்டும் என்று பலர் பலவாராக முயன்று கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் RmKV ஜவுளிக்கடல் மீண்டும் கின்னஸில் இடம்பெற ஒரு சாதனையைச் செய்திருக்கிறது. அதாவது ஐம்பத்து நாலாயிரத்து அறுநூறு (54,600) வண்ணங்கள் கொண்ட ஆறு கெஜம் சேலையை நெய்திருக்கிறார்கள். இதில் 105 x 520 என்று சிறிய கட்டங்களுடன் அத்தனை வண்ணங்களுடன் காட்சியளிக்கிறது. சென்ற வருடம் உலகின் மிக நீள பட்டுச் சேலை - 702 அடி நீளம் நெய்து சாதனை புரிந்தார்கள்.
இந்த சாதனையைச் செய்ய மிகச் சிரத்தையுடன் கணிப்பொறி உதவியுடன் ஒரே வண்ணங்கள் இல்லாமல் செய்ததாகக் கூறுகிறார் திரு.K.விஸ்வநாதன்(RmKV). இச்சேலையின் எடை 1.30கிலோ கிராம் (850 கிராம் பட்டு மற்றும் 450 கிராம் சரிகையின் கலவையில்) உருவாக்கியிருக்கிறார்கள். முதலில் ஆறு சேலைகள் தயாராக இருப்பதாகவும்; மேலும் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களுக்கேற்ப நெய்து தருவதாகவும், இச்சிறப்பம்ச சேலைக்கு ஐம்பதாயிரம் ரூபாயை விலையாக நிர்நயத்திருப்பதாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருக்கிறார் திரு. K.சிவகுமார்(RmKV).
சென்ற வாரத்தில் ஒரு விளம்பரம். நடிகை ஜோதிகா - எந்த கலரில் புடவை எடுக்கலாம்? என்று எல்லோரிடமும் கேட்பார். இந்த சேலைக்குத்தான் இவ்வளவும் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. இந்த சேலையுடன் இப்போது விளம்பரத்திலும் வருகிறார் ஜோ.
இச்செய்தியின் குறிப்பை ஒரு பத்திரிகையிலிருந்து எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது வாசலில் ஒரு பெண் கிழிந்த சேலையுடன் ஐயா! தர்மம் பண்ணுங்க சாமி! என்ற குரல் ஒலித்தது
Comments:
<< Home
RmKVக்கு இலவச விளம்பரமா? சேச்சே.. உடாதீங்க.. விளம்பரப்படுத்தினதுக்கு ஒரு தொகையை வாங்கிடுங்க! ஆமா ஜோதிகா போட்டோ கிடைக்கலையா?!
What are you trying to say by your last so called 'punch dialog'?. When you come out of hotel you can hear "Iyya pasikuthu" so really did you offer food for him or because of our poverty you never go hotel.
Post a Comment
<< Home