Thursday, June 09, 2005
Peak Hour Bus
சென்னை மாநகரிலே, மாநரகப் பேருந்தில் பயணம் செய்வதென்பது (அதுவும் பீக் ஹவர்ஸில்) சொல்லவும் வேண்டுமோ? ஏன் இந்த நிலைமை? அரசாங்கம் ஏன் அதிகமான அக்கறை காட்டமல்இருக்கிறது? என்னுடைய கற்பனையில் சிங்காரச் சென்னையின் பேருந்து....
*காலை மற்றும் மாலை வேளைகளில் குறிப்பிட்ட பள்ளிகள் இருக்கும் இடத்திற்கு (நான்கு/ஐந்து) பள்ளிகள் ஒருசேர இருக்கும் இடத்திற்கு சில பேருந்துகள் தனியாக - அதாவது மாணவர்களுக்காக மட்டுமே இயக்கலாம்.
*மாநரகப் பேருந்தை எதிர்ப்பார்க்காமல், வேலைக்குச் செல்லும் சில அரசாங்க ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து வேனில் பயணிக்கிறார்கள்.
*இதனை அரசாங்கமே சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பாக பேருந்தை இயக்கலாம்பேருந்து எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் வரலாம்; ஆனால் பேருந்தில் கணிசமாக கூட்டம் குறைந்திருக்கும்.
*ஒரேடியாக மூன்று பேருந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக இயக்குவதைவிட சராசரியாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்தாக இயக்கலாம்.
*ஷேர் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்கள் நிறைய வந்தாலும் பேருந்தில் நெரிசல் மட்டும்குறையவேயில்லை.
*குறிப்பாக ஒரு பேருந்து நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு செல்ல தனியாக மேம்பாலங்களோ, சாலைகளோ அமைக்கலாம்.
*சகட்டுமேனிக்கு எஸ்.எம்.எஸ் போட்டி நடத்தும் வானொலிகள்,தொலைக்காட்சிகள் இந்த விஷயத்தை ஆராய்ந்து அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கலாம்
*இப்படியெல்லாம் சிந்திக்காமல் மற்றவர்களை குறை கூரியே காலத்தைக் கழிக்கிறார்கள்நம் அரசாங்கத்தினர்.
Comments:
<< Home
காலைல ஆபிஸுக்குப் போறதுக்குள்ள ரொம்ப அவஸ்தைப் படுறீங்க போலிருக்கு! அதான் இப்படி குமுறியிருக்கீங்க! இருக்கிற வசதிகளைவிட, சென்னைல மக்கள் கூட்டம் மூணு மடங்கு இருக்கே, என்ன செய்ய!
Post a Comment
<< Home