Wednesday, April 20, 2005

 

DECCAN CHRONICLE

சென்ற வாரம் முதல் "தி ஹிந்து"விலிருந்து "டெக்கான் க்ரானிக்கல்"க்கு மாறியிருக்கிறேன்.
அதுவும் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு இருபத்தி ஏழு பைசாவிற்கு, அதாவது ஒரு வருடத்திற்கு ரூபாய் 99 மட்டுமே!! It is purely to catch the readership. பிறகு படிப்படியாக விலையை ஏற்றத்தான் போகிறார்கள்.
அதற்குள் மற்ற பத்திரிகையாளர்கள் விலையை கண்டிப்பாக குறைப்பார்களா?! நடக்கலாம்..

"தி ஹிந்து"வின் மார்க்கெட்டை வீழ்த்தவே க்ரானிக்கலின் சென்னைவாசம் என்கிறார்கள் சிலர்.. எது எப்படியோ ஒரு ரூபாய்க்கு நாளிதழ் என்றால் பேப்பர் படித்து பழக்கமில்லாதவர்கள்கூட வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.(பெயர்கூட சொல்லாமல் ஒரு ரூபாய் பேப்பர்) என்றே கேட்டு வாங்குகிறார்கள்.
வழக்கம்போல் எல்லா நாளிதழ்களிலும் வருவதுபோல் டி.வி செய்திகள்,விளையாட்டு,ஜோஸியம்,வெளிநாடு, சென்னையைச் சுற்றி, போன்ற பல தகவல்கள் அதிக பக்கங்களுடன் குறைந்த விலையில் கிடைக்கிறது. முழுவதும் படிக்க நேரம்?

தினம் ஒரு ரூபாய்க்கு ஒரு நாளிதழ் என்றால் விட மனசுவருமா? அதுவும் மாதத்திற்கு முப்பது ரூபாய் செலவழித்துவிட்டு, பேப்பர்காரரிடம் போட்டால் குறைந்தபட்சம் இருபத்தைந்து ரூபாயாவது நமக்கு திரும்ப கிடைக்குமே! (அல்ப ஆசை)

Comments:
தமிழிலும் ஏதவது பத்திரிகை , விலைகுறைப்பு செய்ய வர வாய்ப்புள்ளது என்பதால் நல்ல செய்தி. மேலும் இந்துவிலிருந்து டெ. ஹெ. டுக்கு போவதும் நல்லதுதான்.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?