Monday, March 07, 2005
Metropolitan Transport Corporation
நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்ட விஷயம் பயணம். அதுவும் நடுத்தர வர்க்கம் என்றால் பேருந்து பயணம்; அதாவது "மாநரகப் பேருந்து". பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் முதல் ஓய்வூதியம் பெறும் தாத்தாக்கள் வரை உபயோகிக்கும் ஒரு பயண ஊர்தி.
காலை மற்று மாலை வேளைகளில் Peak Hour என்று சொல்லப்படும் நேரத்தில் பேருந்து நேராகச் செல்வதற்கு பதில் படிக்கட்டுகள் சிங்கார சென்னையின் அழகு சாலைகளை முத்தமிட்டுக் கொண்டுதான் செல்கின்றன. குறிப்பாக புறநகர்வாசி என்றால் சொல்லவே வேண்டாம். குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருக்கும்.
ஏன் இந்த நிலைமை? அரசாங்கமும் பாவம் எவ்வளவோ திட்டம் போடுகிறது! செயல்பாட்டைத்தான் காணவில்லை! இப்பொழுதுகூட சட்டசபையில், மேலும் 2000 பேருந்துகள் அதிகரிக்கப் போவதாக அறிக்கை வாசித்தார்கள். ஒருவேளை அப்படியே நிறைவேறினால் போக்குவரத்துக்கு வழி எங்கே? தற்பொழுதுள்ள நிலைமையே சாலைகளில் ஊர்ந்து செல்வதுதான்; மேலும் வாகன எண்ணிக்கை அதிகரித்தால்!!
இந்த அவல நிலை மாற என்ன வழி?
சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?!