Wednesday, March 30, 2005

 

RAM

RAM என்றவுடன் ராண்டம் ஆக்ஸஸ் மெமரி என்று நினைக்கவேண்டாம்; இது அமீரின் ராம் திரைப்படத்தைப்பற்றிய விமர்சனம்...

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்ற ஞாயிற்றுக்கிழமை நானும் என் குடும்பத்தாரும் உல்லாசமாக வெளியே சென்றோம். என் அலுவலக நண்பரின் உதவியால் உதயம் தியேட்டரில் ராம் திரைப்பட்த்திற்கு ஐந்து டிக்கட் கிடைத்தது. பகல் காட்சி வேறு. என்னுடைய வற்புறுத்தலால் அனைவரும் வெயிலை பொருட்படுத்தாமல் வந்தனர். இத்திரைப்ப்டத்தின் கதையை ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். அதாவது தாயைக் கொன்றவன் மகனே என்று படம் ஆரம்பிக்கிறது; இறுதியில் உண்மையான கொலைக்காரனை கண்டுபிடிக்கிறான் மகன். ராம் கதாபாத்திரத்தை கனகச்சிதமாய் செதுக்கியிருக்கிறார் ஜீவா. இது அவருக்கு மூன்றாவது படம். இப்படத்தில் அழகாக கண்களை திறந்துக்கொண்டு நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் எப்படிப்பட்டதென்றால் கோபமோ, சந்தோஷமோ இரண்டையுமே உச்சத்தில் காட்டுகிறார்; குறிப்பாக அவருடைய மேனரிஸம் (செய்கை) மார்பை முன்பாக தள்ளிய நடையும், அகன்ற விழிகளும், தலையை ஆட்டும் விதமும், இயக்குநர் அமீர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். அடுத்ததாக சாரதாம்மா(சரண்யா)ராமுடைய அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார்.பள்ளி ஆசிரியை என்பதால் ஓரிரண்டு காட்சிகள் பள்ளியில் எடுத்திருக்கிறார்கள்.

கதாநாயகி கஜாலா எப்பொழுதுமே கண்ணில் கிளசரினுடன் வலம் வருகிறார். ஆனால் மரத்தச்சுற்றி ஆடுவது, மழையில் வெள்ளை ஆடையுடன் வலம் வருவது, நகைச்சுவை என்ற பெயரில் ஆபாச வசனங்கள் போன்ற கோலிவுட் கோமாளித்தனங்களை மீறி ராம் எடுத்ததற்கு அமீருக்கு ஒரு "ஓ" போடவேண்டும்.

வாழவந்தான் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் கஞ்சா கருப்பன். இவரைப் பற்றி தனியே அடுத்த தலைப்பிலே பார்க்கலாம். ரஹ்மான் மீண்டும் வெள்ளித்திரையில்... கோபம்,சந்தோஷம்,நக்கல் போன்ற அனைத்தயும் கச்சிதமாய் செய்திருக்கிறார். அவருக்கு உதவியாக மலையாள நடிகர் முரளி(தமிழ் நடிகர் ராஜேஷின் குரலில்) ஜொலிக்கிறார். ரஹ்மான் மீது அப்படி என்ன கோபமோ? இயக்குநருக்கு... சொல்ப காட்சிகளிலேயே சாகடித்துவிடுகிறார். பிரத்தாப்போத்தனும் வந்து போகிறார். மொத்தத்தில் ஒன்றரை வருட உழைப்பை, கனவை நனவாக்கியிருக்கிறான் இந்த ராமகிருஷ்ணன் என்கிற ராம்.

இரண்டு மணிக்கு தியேட்டரை விட்டு வெளியே வந்தோம். சூரிய பகவான் சுட்டெரித்துக்கொண்டிருந்தார். எனவே ஆட்டோவில் செல்லலாம் என்று அணுகினால் உதயத்திலிருந்து கேஸவர்த்தினிக்கு(செளத்ரி நகர்) செல்ல அநியாயக்காரன் 60 ரூபாய் கேட்டான். இன்னொரு ராம் உருவாகவேண்டாம் என்று என் மாமா சொன்னதால் அவனிடம் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். பிறகு ஒருவழியாக 35 ரூபாய்க்கு வீடு போய்ச் சேர்ந்தோம்.

Comments:
Yaar andha ticket vaangi kodutha Ganja karuppan(r).
 
Yaar andha ticket vaangi kodutha Ganja karuppan(r).
 
Font, which you are using is good.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?