Thursday, March 24, 2005

 

TASMAC

சட்டசபையில் என்னதான் நடக்கிறது? என்று பார்க்க வெகுநாளாகவே எனக்கு ஒரு ஆசை.

இதற்காக அலுவலகத்திற்கு விடுப்பு போடமுடியுமா என்ன? ஒரு தனியார் தொலைக்காட்சியின் கைங்கர்யத்தில் இரவு 11 மணிக்கு சில நாட்கள் சட்டசபையின் தொகுப்பை விரும்பி பார்ப்பேன். சமீபத்தில் பார்த்த சில காட்சிகளின் தொகுப்பை இங்கே அளிக்கிறேன்.

இவ்விஷயம் மிகவும் அவசியமா? இல்லையா? என்று ஒவ்வொருவரும் எண்ணவேண்டும்!!

அரசு மதுக் கடைகள் மூலம் ரூ. 5,441 கோடிக்கு 'உ.பா' விற்பனை

அரசே நடத்தும் மதுக் கடைகள் மூலம் (டாஸ்மாக் கடைகள்) ரூ. 1,514 கோடி அளவுக்கு கூடுதலாக 'உற்சாக பான' விற்பனை நடந்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

தமிழக சட்டசபையில் மது விலக்கு ஆயத்தீர்வை மற்றும் வருவாய்த்துறைக்கான மானியக் கோரிக்கைகளை அமைச்சர் ஓ.பி. தாக்கல் செய்து பேசினார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில் தனியார் கடைகள் மதுபான விற்பனையை மேற்கொண்டபோது, டாஸ்மாக் கடைகளின் மூலம் ரூ. 3,877 கோடி அளவுக்கு மட்டுமே மது பான விற்பனை இருந்தது.

தற்போது அரசே நேரடியாக நடத்தும் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் தொகை ரூ. 5,441 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒராண்டுகால மது விற்பனையின் மூலம் கூடுதலாக கிடைத்துள்ள தொகை ரூ. 1,564 கோடியாகும்.

இந்த 11 மாத காலத்தில் மட்டும் கூடுதலாக ரூ. 1,514 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. நடப்பாண்டில் மது பான விற்பனை அளவு 176.16 லட்சம் பெட்டிகள் ஆகும். முந்தைய நிதியாண்டில் இது 143.06 லட்சம் பெட்டிகளாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் கடந்த 11 மாதங்களில் மட்டும் 33.10 லட்சம் பெட்டிகள் கூடுதலாக விற்றுள்ளது. இது மகத்தான சாதனையாகும்.

தமிழகத்தில் 4,016 மதுபான கடைகளில் பார் வசதி உள்ளது. டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் 33,600 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 21 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்க தடை செய்யப்பட்டுள்ளது என்றார் ஓ.பன்னீர் செல்வம்.

முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பேசுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்தில் தான் அதிக அளவு மது விற்பனையாகிறது. அங்கு பூரண மது விலக்கை ஆளும் காங்கிரஸ் கொண்டு வருமா? என்று கேட்டார்.

தொடர்ந்து பேசிய ஞானசேகரன், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதியாக தலைவர் மற்றும் 11 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பதையே அதிமுக அரசு நிறுத்திவிட்டது. இந் நிலையில் தேர்வாணையத்துக்கும் எந்த வேலையும் இல்லை என்றார்.

அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்த வேலையும் செய்யாமல் இல்லை. இதன் மூலமாகத் தான் அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2,322 டாக்டர்களை இந்த ஆணையம் தேர்வு செய்துள்ளது. இவர்கள் அரது மருத்துவமனைகளில் பணியில் சேர்க்கப்படவுள்ளார்கள்.

மேலும் அரசு ஊழியர்கள் தொடர்பாக பல யோசனைகளை இந்த ஆணையம் வழங்கி வருகிறது. இதனால் அரசுப் பணிக்கு ஆள் எடுப்பதை நிறுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டுவது தவறு என்றார் ஜெயலலிதா.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் குடிமக்கள் பெருகிவருகிறார்கள்!! வேறுமாநிலத்திலிருந்து குடிபெயருவதால்கூட

Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?