Monday, March 14, 2005
BAD DEBTS
வங்கிகளில் வாராக்கடன் என்ற தலைப்பில் வருடந்தோறும் பல லட்சங்கள்/கோடிகள் நிலுவையில்உள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களும் உள்ளன; ஆனால் சாமானியமக்களின் நிலைமையோ தலைகீழ். வங்கியில் பணமிருந்தாலும் காசோலை திருப்பி அனுப்பப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 'பாலாஜி ஓட்டல் அண்ட் எண்டர்பிரைசஸ், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்' நிறுவனங்கள் உள்ளன.
பொதுத்துறை வங்கிகளில் மொத்தமுள்ள ரூபாய் 15 லட்சம் கோடி டெபாசிட் தொகையில் 3 லட்சம் கோடி வராக்கடனாக நிலுவையில் உள்ளது. கடந்த 1997ல் வராக்கடன் நிலுவை ரூபாய் 47 ஆயிரத்து 300 கோடியாக இருந்தது. 2004ல் இது 96 ஆயிரத்து 84 கோடியாக அதிகரித்தது. இடைப்பட்ட காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன், நடப்பில் இருக்கும் கடன் மீதான வட்டி ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் வராக்கடன் தொகை ரூபாய் 3 லட்சம் கோடியாக நிலுவையில் உள்ளது.
கோடிக்கணக்கில் கடன் வாங்கிய பலர் அதை திருப்பி செலுத்தவில்லை. அவர்களில் பலர் அரசியல் பலம், செல்வாக்கு மிகுந்தவர்களாக உள்ளனர். பலர் மீது வழக்கே பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்த பல வழக்குகள் தொடர் நடவடிக்கையின்றி தூங்குகின்றன. இதனால், பொதுத்துறை வங்கிகள் நலிவடையும் ஆபத்து அதிகரிக்கிறது.
கடன் வாங்கி திருப்பி செலுத்தத் தவறியவர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா மற்றும் அகில இந்திய வங்கிப் பணியாளர் சங்கத் தலைவர்கள் நேற்று முன்தினம் இப்பட்டியலை வெளியிட்டனர். ரூ.350 கோடிக்கும் அதிகமான கடன் வாங்கி வழக்கே பதிவு செய்யப்படாத முதல் பத்து நிறுவனங்கள் பட்டியலில் தமிழக நிறுவனங்களும் உள்ளன.
நிறுவனங்கள் பெற்ற கடன் தொகை (ரூ.கோடியில்)
1. மாளவிகா ஸ்டீல் (மகாராஷ்டிரா) 1227
2. மாடர்ன் சின்டெக்ஸ் (மகாராஷ்டிரா) 867
3. பிரகாஷ் இண்ட்ஸ் (அரியானா) 725
4. லாயிட் ஸ்டீல் (மகாராஷ்டிரா) 595
5. உஷா இஸ்பட் லிமிடெட் (உ.பி.) 555
6. பாலாஜி ஓட்டல்ஸ் அண்ட்
என்டர்பிரைசஸ் (தமிழ்நாடு) 477
7. மபத்லால் இண்டஸ்ட்ரீஸ்
லிமிடெட் (ஆமதாபாத்) 440
8. இந்துஸ்தான் போட்டோ
பிலிம்ஸ் (தமிழ்நாடு) 422
9. டிசிஎம் லிமிடெட் (புதுடில்லி) 372
10. ஜே.கே. சிந்தடிக்ஸ் லிமிடெட்
(கான்பூர்) 352
நன்றி : தினமலர் நாளிதழ்