Wednesday, June 01, 2005

 

Shock News

நேற்று அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு சென்றவுடன் ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
என்னுடைய தூரத்துச் சொந்தக்காரரின் மகன்(வயது 21) விபத்தில் இறந்ததாக செய்தி வந்தது.

சென்ற செவ்வாய் அன்று காலை 6.30 மணிக்கு டென்னிஸ் விளையாட சென்ற மகன் வீடு திரும்பினான் உயிரற்று.

காலை வேளை, போக்குவரத்து நெரிசல் கூட இல்லாத நேரம் பல்சரில் சென்ற இளைஞன் மீது கார் மோதி வண்டியிலிருந்து எகிறி பத்து அடிக்கு தூக்கியெறியப்பட்டு மீண்டும் காரின் மீதே விழுந்திருக்கிறான். விழுந்த வேகத்தில் மூளைப் பகுதியில் பலத்த அடிப்பட்டு உடம்பே முறுக்கலாகி விட்டதாம். ஒரு வார காலமாக நினைவில்லாமல் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை உயிர் பிரிந்துவிட்டது.

இதை படிப்பவர்கள் தயவு செய்து வண்டியில் செல்லும்போது (அடுத்த தெருவே இருந்தாலும் கூட) தவறாமல் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Comments:
நல்ல அட்வைஸ். இப்ப ஓட்டுநர்கள் ஓட்டுற லட்சணத்துக்கு, பேருந்துல போறப்பக் கூட ஹெல்மெட் அவசியம்னு தோணுது.
 
நல்ல பதிவு.. அக்கரையான பதிவு... !
அனைவரும் கடைப்பிடித்தால் நன்று..

வீ .எம்
 
அவசியமான பதிவு.நன்றி விஜய்
 
அனைவரும் கடைப்பிடித்தால் நன்று
 
கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
டெல்லி போன்ற நகரங்களில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாம் ....
 
oh god! i want to buy helmet immediately.
 
ÉÉÅÕõ ¾¨Ä¸Åºõ «½¢Â §ÅñÎõ ±ýÚ «ÃÍ ´Õ ºð¼õ §À¡ð¼¡ø ܼ ¿øÄÐ ¾¡ý
þÕó¾Öõ ¿¡õ ¯Â¢÷ Á£Ð ¬¨ºÂ¢Õó¾¡ø ¾¨Ä¸Åºõ «½¢ÂÄ¡õ

Herohonda
Chennai
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?