Wednesday, September 07, 2011

 

Sri Sundara Vinayagar Aalayam, Chennai

ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம் - குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை.

பெயர் - ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம்
இடம் - குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை - 600056 .
மார்க்கம் - கோயம்பேடிலிருந்து சுமார் 10 கி.மீ / போரூரிலிருந்து சுமார் 5 கி.மீ
தர்மகர்த்தா - திரு. மு.ஞானம் (முன்னாள் நகராட்சி தலைவர்), பூவிருந்தவல்லி.

சென்னையை அடுத்துள்ள குமணன்சாவடியில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீ சுந்தர விநாயகர்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து வேகமாக நடந்தால் மூன்று நிமிடம்; மெதுவாக நடந்தால் ஐந்து நிமிடம். கோவிலை வந்தடையலாம். ஹைவேசின் புண்ணியத்தால் மெயின் ரோடிலுருந்தே கோபுர தரிசனம் செய்யலாம். அந்த அளவிற்கு தற்போது ஆக்கிரமிப்புகளை அழித்திருக்கிறார்கள்.

1930 களில் எனது தாத்தா இக்கோவிலுக்கு பூஜை செய்ய நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு என் அப்பாவும், பெரியப்பாவும்... இப்பொழுது அவர்களின் வாரிசுகள், வாரிசுகளின் வாரிசு என்று தொடர்கிறது.....

ஸ்ரீ சுந்தர விநாயகர் - சித்தி புத்தி சமேதராய் காட்சி தருகிறார். அவர் மட்டுமல்லாமல் ஸ்ரீ சுப்பிரமணியர் - வள்ளி தெய்வானையுடன், சிவன் பார்வதியுடன் காட்சி தருகிறார்கள். 1935 இல்  நவக்கிரகங்கள் இருந்தது. தற்போது அஷ்ட கிரகங்கள்தான். ஒன்று சிதிலம் அடைந்துவிட்டது. சண்டிகேஸ்வரரும் இருந்தார். பல முறை பாலாலயம் செய்து குடமுழுக்கு செய்யாமல் இருக்கிறது; காரணம் - ஸ்ரீ சுந்தர விநாயகருக்கே வெளிச்சம்.

திடீரென்று ஒரு நாள் சுவரெல்லாம் சுண்ணாம்பு அடித்து, பிரகாரங்கள் எல்லாம் சுத்தம் செய்து, செடிகள் வளர்க்கப்பட்டு, பாபா திரைப்படத்தில் வரும் புதிய காளிகாம்பாள் கோவில்போல காட்சியளித்தது; கிராபிக்ஸ் இல்லாமல்..   இந்த தனுர் மாதத்திலிருந்து இரண்டு வேளை பூஜை, அபிஷேகங்கள், ஆராதனைகள், ஜிகு ஜிகு மின் விளக்குகள் என்று விநாயகருக்கு மவுஸ் வந்துவிட்டது; வாகனம் கூட மவுஸ்தானே.....  ஐயப்ப பக்தர்கள் மூலமாக பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் திடீரென்று  முனைப்போடு ஆரம்பித்தார்கள். குடமுழுக்கு நடக்கும் முன்பே கூட்டம் வர தொடங்கியிருக்கிறது. எல்லாம் வல்ல விநாயகர் அருளால் விரைவிலேயே விநாயகருக்கு குடமுழுக்கு நடக்க பக்தகோடிகள் சார்பாக நாம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.

 இந்தக் கோயிலுக்கு அருகாமையில்தான்  பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது.

Labels: , , ,


Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?