Wednesday, May 11, 2005

 

Once More

இந்த கோடை காலத்திற்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று மோர் அருந்துவது; இதனைப் பற்றியச் செய்தியை ஞாயிறு வாரமலரில் வெளியிட்டிருந்தார்கள். அவற்றிலிருந்து சில....

* நாக்கு வறட்சி, அதிக தாகம், போன்றவற்றை தணிப்பது மோர் மட்டுமே.
* நீருடன் புரோட்டீன் மற்றும் தாதுப்பு மோரில் உள்ளதால் வியர்வை மூலம் உடலிலிருந்து வெளியேறும் உப்பை மோர் மூலம் சுலபமாக பெறலாம்.
* மோரிலுள்ள 'லாக்டோபாஸிலஸ்' உடலில் ஏற்படும் கெட்ட வாசனை ஏற்படாமல் தடுக்கும்.
* மேலும் நம் உடல் எப்போதும் குளுகுளுவென்று இருக்கும்.
* ஒரு கப் பாலில் 300மி.கி கால்சியம் இருந்தால், ஒரு கப் மோரில் 450ம்.கி கால்சியம் இருக்கும்; இது 30 முதல் 50 சதவிகித ஒரு மனிதனின் அன்றாட தேவையான கால்சியத்தின் அளவு.
* பாலில் இருப்பதைவிட மோரில் அதிகளவு வைட்டமின் பி,பி2.பி3,பி6,ஏ,கே போன்றவைகள் உள்ளன.
* ஒரு கப் பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 30 சதவிகிதம்தான் செரிமானமாகியிருக்கும்
* ஆனால் ஒரு கப் மோர் அருந்தினால் 90 சதவிகதம் செரிமானமாகியிருக்கும்; இதற்குக் காரணம் லாக்டிக் அமிலம். மோரில் அது குறைவாக உள்ளது.
* தினமும் இரண்டு கப் மோர் அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
* மோர், குடலில் உருவாகும் நச்சு பேக்டீரியாக்களை அழித்து, குடல் நோய்கள் வருவதை தவிர்க்கிறது.
* பல் நோய்களை தவிர்க்கும் ஆற்றல் மோருக்கு உண்டு என்பதை சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
* மோரில் ஐஸ் போட்டு அருந்துவதால் எந்த பயனுமில்லை; மாறாக இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பலை, கொத்துமல்லி போட்டு அருந்துதல் நலம்.
* பாக்கெட் மோரைவிட வீட்டில் தயாரிக்கும் மோரே சிறந்ததாகும்.

ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் என்று மோரை அருந்திக்கொண்டே இருப்பது சாலச் சிறந்தது.

Friday, May 06, 2005

 

DDLJ

இந்திய சினிமா வரலாற்றில் ஓர் மயில்கல் தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே (ஹிந்தி திரைப்படத்தின் பெயர்) சுருக்கமாக DDLJ என்று கூறுவார்கள். இத்திரைப்படம் 1995-ம் வருடம் அக்டோபர் மாதம் 25, திரையிடப்பட்டது. மே 13 2005 அன்றுடன் 500 வாரங்கள் ஆகிறது. நம்ம ஊர் "கரகாட்டக்காரன்" போல் மும்பையிலுள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படம் 400 வாரங்களைக் கடந்த்பொழுது இதற்கு மேல் ஓடாது என்று நினைத்தோம். ஆனால் இப்பொழுது 600 வாரங்களையே தாண்டும் என்றும், அத்துடன் 60% மக்கள் கூட்டம் மேட்னிக்கும், வார இறுதி நாட்களில் ஹவுஸ்·புல் போர்டு போடுகிறோம் என்று தியேட்டர் மேலாளர் பிரவின் வி.ரானே கூறுகிறார்.

இவ்வளவு வரவேற்புள்ள இப்படத்திற்கான டிக்கெட் விலை: ஸ்டால்-16/- அப்பர் ஸ்டால்-18/- பால்கனி-20/-

மொஹமத் நிஸார்(வெயிட்டர்) என்பவர் குறைந்தபட்சம் 70 முறை பார்த்ததாக கூறுகிறார். இவருக்கு 20 ரூபாய் டிப்ஸ் கிடைத்தால் உடனே திதுலேஜா சென்றுவிடுவாராம்.

மொஹமத் நிஸார்போல் பல பேர் இருப்பதால்தான் ஷாருக், கஜோல் போன்ற கோடீஸ்வரர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்....

This page is powered by Blogger. Isn't yours?