Tuesday, December 13, 2005

 

Thanks Giving Day

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாள் என்று மிக விமரிசையாகக் கொண்டாடுவார்கள். நான் சென்னையில் ஒரு B.P.O வில் பணியாற்றியபோது அன்று அலுவலகத்திற்கு விடுமுறை விடுமளவிற்கு அமெரிக்காவில் அது பிரசித்தம்.

இந்த மாதம் நான் அமெரிக்காவில் இருப்பதுபோல் உணர்கிறேன். ஏனெனில் நான் சில பேருக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

முதல் நன்றி முகிலுக்கு; என்னை வடிவேலு தமாஷா மெயிலை எழுத யோசனை சொல்லி அதனை அனுப்பியதற்கு. இரண்டாவது நன்றி வலைஞனுக்கு; கல்கி (4-12-2005) இதழில் வலைஞன் என்னுடைய ப்ளாகிலிருந்து வடிவேலுவின் தமாஷா மெயிலை எழுதியிருந்தார். மூன்றாவது நன்றி தினமலர் நாளிதழின் வலைதளத்தின் பிற இதழ்கள் பகுதியில் கல்கியில் வெளியானதை போட்டிருக்கிறார்கள் . நான்காவது நன்றி மாயவரத்தான்.ப்ளாக்ஸ்பாட்.காமில் பத்திரிகைகளில் தமிழ் வலைப்பூக்கள் பகுதியில் குறிப்பிட்டமைக்கு.


அனைவருக்கும் நன்றி.

This page is powered by Blogger. Isn't yours?