Tuesday, May 16, 2006

 

Vijay TV

சமீபமாக விஜய் டி.வியில் நிகழ்ச்சிகளெல்லாம் புதுமையாகவும், நேர்த்தியாகவும் இருக்கின்றன. சென்ற மாதத்தில் விஜய் டி.வி நடத்திய இருவர் என்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. S.P.B, மலேசியா வாசுதேவன், சித்ரா, மது பாலகிருஷ்ணன், சைந்தவி, சத்யன் ஆகியோர் பங்கேற்று பாடினார்கள். நன்றாக இருந்தது. விரைவில் டி.வியிலும் எதிர் பார்க்கலாம்.

புதிய வரவான Koffee with Suchi, நீயா? நானா?, வரவிருக்கும் Grand Master போன்ற அனைத்துமே நன்றாக அமைந்திருக்கிறது. இவை இல்லாமல் சிகரம் தொட்ட மனிதர்கள், கலக்கப்போவது சேம்பியன், போன்ற நிகழ்ச்சிகளும் நன்றாக இருக்கிறது. மெகாத் தொடர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை.

புதிதாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் Airtel மற்றும் விஜய் டி.வியும் இணைந்து நடத்தியிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் நன்றாக இருக்கிறது. ஆனால் காம்பியர் என்ற பெயரில் சின்மயி (பின்ணணிப் பாடகி) படுத்தும் பாடு சகிக்கவில்லை; பேச்சு, நடை, உடை எல்லாமே கன்றாவியாக இருக்கிறது. டி.வி என்ற மீடியாவிற்குள் வந்துவிட்டால் இதெல்லாம் தேவைப்படுகிறதுபோல! மிர்ச்சி சுச்சியும் கூட இதே ரகம்தான்.

நல்ல வேளை! இவற்றில் பல நிகழ்ச்சிகள் மற்ற டி.வியின் மெகாவை பாதிக்காமல் இருப்பதால் என் அம்மாவிடமிருந்து ரிமோட்டைத் தற்காலிமாகக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறேன்.

This page is powered by Blogger. Isn't yours?