Wednesday, December 07, 2011

 

The last working day of the month

 அமெரிக்காவில் ஒரு பெரிய கார்ப்பரேட்டில்...... அமைந்தகரையிலும் நடக்கும். இருந்தாலும் டாலரின் மதிப்பு குறைந்தாலும் மவுசு குறையாதயிடமாயிற்றே.....

முதல் வாரம் : மாதத்தின் முதல் நாள்/வாரம் கொஞ்சம் வேகத்துடனும், உத்வேகத்துடனும் இருக்கும். மீட்டிங், டிஸ்கஷன்,ப்ளான், ஸ்ட்ரேடஜி, லொட்டு, லொசுக்கு என்று...

இரண்டாம் வாரம்: லேசான திட்டுகளுடன் ஆரம்பிக்கும். போன வாரமே நாம இதப்பத்தி பேசினோம்; இன்னும் நீ அச்சீவ் பண்ணல.(why are you so lazy?)  இன்னும் ரெண்டு நாளில் ப்ரெஸண்டேஷன் இருக்கு. நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது!! வீக்கெண்ட் வந்தாவது கம்ப்ளீட் பண்ணணும். சந்தடி சாக்கில் வாரயிறுதியில் வருவிக்க மேலதிகாரிகள் ரூம் போடாமலே யோசனை சொல்வார்கள்.


மூன்றாம் வாரம்: வீக்கெண்ட் ஒர்க் பண்ணிருக்கே போல இருக்கே!! உன்கிட்டேருந்து ஈ.மெயில் வந்தது. யெஸ் பாஸ்!! எப்படியோ ஒரு வழியாக கம்ப்ளீட் பண்ணிட்டேன். அதற்கு மேலதிகாரியிடமிருந்து பாராட்டு குவியாது.. அவரின் பதில்:- ஆனா ஒரு பிரயோஜனமும் இல்ல; ஏன்னா அதுல அட்டாச்மெண்டே இல்ல... நான் எப்படி அதுல ஒர்க் பண்ண முடியும்!! உனக்கு கால் பண்ணா “ச்விச்ட் ஆஃப்”. (How irresponsible are you? ) இந்த மாதிரியே போனா உன் ரேட்டிங்கிற்கு நான் பொறுப்பில்ல. பிறகு என்ன வந்து கேள்வி கேட்காதே!!

நான்காம் வாரம்: பாஸும், சபாடினேட்டும் கைகோர்த்துக்கொண்டு கேண்டீன் செல்வார்கள்; அங்கே காஃபீ வித் பாஸ் கலந்துரையாடல், ஒரு நாள் பாஸ் வீட்டில் விருந்து (விருந்திற்கு ஏதாவது ஒரு காரணம் கண்டிப்பாக உருவாகும்), கொஞ்சம் பாராட்டு மழையிலும் நனையலாம்; ஏன்னா நம்ம பேப்பரைப் போட்டு எங்கே அட்ரீஷன் ரேட்டை ஏத்திடுவோமோ என்று ஒரு ஐயம் பாஸிற்கு அப்பப்போ தோன்றும். மாதத்தின் கடைசி வேலை நாள் - அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மானிட்டரின் முன் அமர்ந்திருப்பார்கள். நான் சொன்ன மானிட்டர்; தமிழில் கணிணி..!! வங்கிக் கணக்கில் டாலர்கள் டாலடித்தவுடன் ஒரு புன்முறுவலாவது வரும். உடனே அதை இந்தியாவில் இருக்கும் வங்கிக் கணக்கிற்கோ (அ) சொந்தங்களின் கணக்கிற்கோ (அ) கடன்காரன் (வீடு கட்ட லோன் கொடுத்த வங்கிதான்) கணக்கிற்கோ மாற்றம் செய்துவிட்டு சந்தோஷத்தில் வீடு கிளம்புவார்கள் பாஸும், சபாடினேட்டும் ஒரே காரில்...

மீண்டும் முதல் வாரம்............


Labels: , , ,


This page is powered by Blogger. Isn't yours?