Wednesday, December 07, 2011

 

The last working day of the month

 அமெரிக்காவில் ஒரு பெரிய கார்ப்பரேட்டில்...... அமைந்தகரையிலும் நடக்கும். இருந்தாலும் டாலரின் மதிப்பு குறைந்தாலும் மவுசு குறையாதயிடமாயிற்றே.....

முதல் வாரம் : மாதத்தின் முதல் நாள்/வாரம் கொஞ்சம் வேகத்துடனும், உத்வேகத்துடனும் இருக்கும். மீட்டிங், டிஸ்கஷன்,ப்ளான், ஸ்ட்ரேடஜி, லொட்டு, லொசுக்கு என்று...

இரண்டாம் வாரம்: லேசான திட்டுகளுடன் ஆரம்பிக்கும். போன வாரமே நாம இதப்பத்தி பேசினோம்; இன்னும் நீ அச்சீவ் பண்ணல.(why are you so lazy?)  இன்னும் ரெண்டு நாளில் ப்ரெஸண்டேஷன் இருக்கு. நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது!! வீக்கெண்ட் வந்தாவது கம்ப்ளீட் பண்ணணும். சந்தடி சாக்கில் வாரயிறுதியில் வருவிக்க மேலதிகாரிகள் ரூம் போடாமலே யோசனை சொல்வார்கள்.


மூன்றாம் வாரம்: வீக்கெண்ட் ஒர்க் பண்ணிருக்கே போல இருக்கே!! உன்கிட்டேருந்து ஈ.மெயில் வந்தது. யெஸ் பாஸ்!! எப்படியோ ஒரு வழியாக கம்ப்ளீட் பண்ணிட்டேன். அதற்கு மேலதிகாரியிடமிருந்து பாராட்டு குவியாது.. அவரின் பதில்:- ஆனா ஒரு பிரயோஜனமும் இல்ல; ஏன்னா அதுல அட்டாச்மெண்டே இல்ல... நான் எப்படி அதுல ஒர்க் பண்ண முடியும்!! உனக்கு கால் பண்ணா “ச்விச்ட் ஆஃப்”. (How irresponsible are you? ) இந்த மாதிரியே போனா உன் ரேட்டிங்கிற்கு நான் பொறுப்பில்ல. பிறகு என்ன வந்து கேள்வி கேட்காதே!!

நான்காம் வாரம்: பாஸும், சபாடினேட்டும் கைகோர்த்துக்கொண்டு கேண்டீன் செல்வார்கள்; அங்கே காஃபீ வித் பாஸ் கலந்துரையாடல், ஒரு நாள் பாஸ் வீட்டில் விருந்து (விருந்திற்கு ஏதாவது ஒரு காரணம் கண்டிப்பாக உருவாகும்), கொஞ்சம் பாராட்டு மழையிலும் நனையலாம்; ஏன்னா நம்ம பேப்பரைப் போட்டு எங்கே அட்ரீஷன் ரேட்டை ஏத்திடுவோமோ என்று ஒரு ஐயம் பாஸிற்கு அப்பப்போ தோன்றும். மாதத்தின் கடைசி வேலை நாள் - அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மானிட்டரின் முன் அமர்ந்திருப்பார்கள். நான் சொன்ன மானிட்டர்; தமிழில் கணிணி..!! வங்கிக் கணக்கில் டாலர்கள் டாலடித்தவுடன் ஒரு புன்முறுவலாவது வரும். உடனே அதை இந்தியாவில் இருக்கும் வங்கிக் கணக்கிற்கோ (அ) சொந்தங்களின் கணக்கிற்கோ (அ) கடன்காரன் (வீடு கட்ட லோன் கொடுத்த வங்கிதான்) கணக்கிற்கோ மாற்றம் செய்துவிட்டு சந்தோஷத்தில் வீடு கிளம்புவார்கள் பாஸும், சபாடினேட்டும் ஒரே காரில்...

மீண்டும் முதல் வாரம்............


Labels: , , ,


Wednesday, September 07, 2011

 

Sri Sundara Vinayagar Aalayam, Chennai

ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம் - குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை.

பெயர் - ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம்
இடம் - குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை - 600056 .
மார்க்கம் - கோயம்பேடிலிருந்து சுமார் 10 கி.மீ / போரூரிலிருந்து சுமார் 5 கி.மீ
தர்மகர்த்தா - திரு. மு.ஞானம் (முன்னாள் நகராட்சி தலைவர்), பூவிருந்தவல்லி.

சென்னையை அடுத்துள்ள குமணன்சாவடியில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீ சுந்தர விநாயகர்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து வேகமாக நடந்தால் மூன்று நிமிடம்; மெதுவாக நடந்தால் ஐந்து நிமிடம். கோவிலை வந்தடையலாம். ஹைவேசின் புண்ணியத்தால் மெயின் ரோடிலுருந்தே கோபுர தரிசனம் செய்யலாம். அந்த அளவிற்கு தற்போது ஆக்கிரமிப்புகளை அழித்திருக்கிறார்கள்.

1930 களில் எனது தாத்தா இக்கோவிலுக்கு பூஜை செய்ய நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு என் அப்பாவும், பெரியப்பாவும்... இப்பொழுது அவர்களின் வாரிசுகள், வாரிசுகளின் வாரிசு என்று தொடர்கிறது.....

ஸ்ரீ சுந்தர விநாயகர் - சித்தி புத்தி சமேதராய் காட்சி தருகிறார். அவர் மட்டுமல்லாமல் ஸ்ரீ சுப்பிரமணியர் - வள்ளி தெய்வானையுடன், சிவன் பார்வதியுடன் காட்சி தருகிறார்கள். 1935 இல்  நவக்கிரகங்கள் இருந்தது. தற்போது அஷ்ட கிரகங்கள்தான். ஒன்று சிதிலம் அடைந்துவிட்டது. சண்டிகேஸ்வரரும் இருந்தார். பல முறை பாலாலயம் செய்து குடமுழுக்கு செய்யாமல் இருக்கிறது; காரணம் - ஸ்ரீ சுந்தர விநாயகருக்கே வெளிச்சம்.

திடீரென்று ஒரு நாள் சுவரெல்லாம் சுண்ணாம்பு அடித்து, பிரகாரங்கள் எல்லாம் சுத்தம் செய்து, செடிகள் வளர்க்கப்பட்டு, பாபா திரைப்படத்தில் வரும் புதிய காளிகாம்பாள் கோவில்போல காட்சியளித்தது; கிராபிக்ஸ் இல்லாமல்..   இந்த தனுர் மாதத்திலிருந்து இரண்டு வேளை பூஜை, அபிஷேகங்கள், ஆராதனைகள், ஜிகு ஜிகு மின் விளக்குகள் என்று விநாயகருக்கு மவுஸ் வந்துவிட்டது; வாகனம் கூட மவுஸ்தானே.....  ஐயப்ப பக்தர்கள் மூலமாக பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் திடீரென்று  முனைப்போடு ஆரம்பித்தார்கள். குடமுழுக்கு நடக்கும் முன்பே கூட்டம் வர தொடங்கியிருக்கிறது. எல்லாம் வல்ல விநாயகர் அருளால் விரைவிலேயே விநாயகருக்கு குடமுழுக்கு நடக்க பக்தகோடிகள் சார்பாக நாம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.

 இந்தக் கோயிலுக்கு அருகாமையில்தான்  பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது.

Labels: , , ,


Tuesday, August 12, 2008

 

GOLDEN EYE

ஷூட்டிங் ஸ்டார் : அபிநவ் பிந்த்ரா

Abhinav Bindra

பேப்பர் பார்த்தா ஆயில் புல்லிங், டி.வி பார்த்தா ஆயில் புல்லிங், இண்டெர் நெட்டில் ஆயில் புல்லிங் என்று ஒரு விளம்பரத்தில் வருவது போல நேற்றிலிருந்து அங்கிங்கெனாதபடிஎங்கு பார்த்தாலும் அபிநவ் பிந்த்ரா பேச்சுதான்.

பெயர் : அபிநவ் பிந்த்ரா

பிறந்த தேதி: 28.9.1982

படிப்பு : MBA (CEO of Abhinav Futuristics, a PC games peripherals distributor based in Chandigarh)

பள்ளி : பத்தாம் வகுப்பு வரை டூன் பள்ளி, டேராடூன், பிறகு செயிண்ட் ஸ்டீஃபன் பள்ளி, சண்டிகர் (ஷூட்டிங்கிற்காக) கனா காணும் காலங்களில் வருவது போல அல்ல... நிஜ ஷூட்டிங்...

வென்றவை : 2008 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் (இந்தியாவின் பங்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு.. மீண்டும்)

2004 - ஒலிம்பிக் (பதக்கம் தவறியது),

2001 - 6 தங்க பதக்கங்கள் (பல்வேறு சர்வதேச ஷூட்டிங் போட்டி), அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது

2000 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட சிறிய வயதுள்ள இந்தியன்,இன்னும் பலப்பல விருதுகள், பாராட்டுகள்....

ஒவ்வொரு இந்தியனும் பெருமிதப்படுமளவிற்கு அபிநவ் சாதித்திருக்கிறார். நானும் பெருமைப்படுகிறேன்.

மிஸ்டர் அபிநவ், கொஞ்சம் தலையை லேசா திருப்புங்க - ஒரு புன்முறுவல் - ஸ்லோவா நடந்து வாங்க - நேரா நடந்து வந்து இந்த சோஃபாவில் உட்காருங்க -மத்ததையெல்லாம் டப்பிங்ல பார்த்துக்கலாம் - டேக் ஓக்கே - இப்படியெல்லாம் இவரை விளம்பர நிறுவனங்கள் படுத்தாமலிருந்தால் சரி..!!!


Sunday, February 10, 2008

 

Million $ Questions

மீண்டும் ஜே.கே.பி, மீண்டும் கோகிலா, மீண்டும் பராசக்தி போல மீண்டும் பிளாகிக்க ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது...Million Euro என்ற
தலைப்பு கூட வைத்திருக்கலாம். ஏனெனில், இன்றைய தேதியில் டாலரை விட யூரோவின் மதிப்பு நன்றாக இருக்கிறது.

நம் அன்றாட வாழ்வில் பலப்பல கேள்விகள், சந்தேகங்கள். அவற்றில் சிலவற்றை இங்கு எழுதுகிறேன்.

1. சென்னை மாநகரப் பேருந்தில் போலிஸ் சீருடை அணிந்து ஏறுபவர்கள், பயணச்சீட்டு எடுப்பதில்லை. அவர்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ளதா? இல்லை அவர்கள் வேண்டுமென்றே எடுப்பதில்லையா?
2. தன் வேலையை செய்ய ஏன் மக்களிடம் பணம் கேட்கிறார்கள் அரசு அதிகாரிகள் (எல்லாத் துறைகளிலும்) இன்று கோலோச்சி நிற்கிறது?
3. எதையாவது (அ) யாரையாவது பற்றி அறிக்கை விடாத ஐயாவாக மாறும் நாள் எப்போது?
4. கலப்படம், ஏமாற்றம் செய்யாத வியாபாரி உருவாவது எப்போது?
5. முன்புபோல நெடுந்தொடர் (மெகாத்தொடர்) இல்லாத நாள் வருமா?
6. திறந்தவெளி கழிப்பறையில்லாத தமிழ்நாடு எப்போது உருவாகும்?
7. பாலும், தண்ணீரும் இன்று ஏறக்குறைய ஒரே விலை. இவை மாறும் நாள்?
8. இந்தியாவில் இரவு நேரப் பணி (Night Shift) இல்லாமல் போவது எப்போது?
9. காக்கா பிடிக்காமல்,DFT முடிக்காமல் வேலையில் promotion பெறும் நாள் எப்போது?
10.தான் தயாரிக்கும் படத்தை மிகப் பிரம்மாண்டமான (பொருட்செலவு) முறையில் ஷங்கர் எப்போது எடுப்பார்?

Labels: , , , ,


Tuesday, May 16, 2006

 

Vijay TV

சமீபமாக விஜய் டி.வியில் நிகழ்ச்சிகளெல்லாம் புதுமையாகவும், நேர்த்தியாகவும் இருக்கின்றன. சென்ற மாதத்தில் விஜய் டி.வி நடத்திய இருவர் என்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. S.P.B, மலேசியா வாசுதேவன், சித்ரா, மது பாலகிருஷ்ணன், சைந்தவி, சத்யன் ஆகியோர் பங்கேற்று பாடினார்கள். நன்றாக இருந்தது. விரைவில் டி.வியிலும் எதிர் பார்க்கலாம்.

புதிய வரவான Koffee with Suchi, நீயா? நானா?, வரவிருக்கும் Grand Master போன்ற அனைத்துமே நன்றாக அமைந்திருக்கிறது. இவை இல்லாமல் சிகரம் தொட்ட மனிதர்கள், கலக்கப்போவது சேம்பியன், போன்ற நிகழ்ச்சிகளும் நன்றாக இருக்கிறது. மெகாத் தொடர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை.

புதிதாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் Airtel மற்றும் விஜய் டி.வியும் இணைந்து நடத்தியிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் நன்றாக இருக்கிறது. ஆனால் காம்பியர் என்ற பெயரில் சின்மயி (பின்ணணிப் பாடகி) படுத்தும் பாடு சகிக்கவில்லை; பேச்சு, நடை, உடை எல்லாமே கன்றாவியாக இருக்கிறது. டி.வி என்ற மீடியாவிற்குள் வந்துவிட்டால் இதெல்லாம் தேவைப்படுகிறதுபோல! மிர்ச்சி சுச்சியும் கூட இதே ரகம்தான்.

நல்ல வேளை! இவற்றில் பல நிகழ்ச்சிகள் மற்ற டி.வியின் மெகாவை பாதிக்காமல் இருப்பதால் என் அம்மாவிடமிருந்து ரிமோட்டைத் தற்காலிமாகக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறேன்.

Friday, March 10, 2006

 

HATS OFF

பெண் பேருந்து ஓட்டுனரை மகளிர் மட்டும் திரைப்படத்தில்தான் பார்த்திருக்கிறேன். இன்று 12-B பேருந்து நிறுத்தமான வடபழனியில் ஏறினேன். ஏறிய ஐந்தாவது நிமிடத்தில் டிக்கெட் கொடுப்பவர் வந்து டிக்கெட் கொடுத்தார். அடுத்ததாக சுடிதார் அணிந்த பெண்மணி ஹேண்ட் பேக்குடன் ஏறினார். நேராக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார். சிலர் (என்னைப்போல்) ஒரு நிமிடம் அச்சர்யத்துடன் பார்த்தார்கள். அடுத்த விநாடி பேருந்தை ஸ்டார்ட் செய்து கீரை போட்டு கிளப்பினார்.

ஒரு பெண் கனரக வாகனம் ஓட்டுவதென்பதே ஒரு ஆச்சர்யமான விஷயம்தானே! அதுவும் எவ்வித தய்க்கமின்றி, பயமுமின்றி. ஆனால் நம்மூரில்தான் வெறும் வாயையே மெல்லுவார்களே; அவல் கிடைத்தால் நாக்கைக்கூட கடித்துக்கொண்டு மெல்லுவார்களே! கமெண்ட் அடிப்பதற்கு குறைச்சலா என்ன?

* இன்னாப்பா இது டொர் டொர்ன்னு மாட்டு வண்டி கணக்கா போவுது.
* இதுங்க வண்டி ஓட்டி நம்ம போக வேண்டியிருக்கு ம் என்ன செய்ய !
* மச்சி இன்னிக்கு டைமுக்கு காலேஜ் போகமுடியாதுடா?
* வண்டி முழுவதும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அட்டகாசம் - விசில் அடிப்பதும், தாளம் போடுவதுமாக..

இத்தனைக்கும் வண்டி அந்த பீக் ஹவரிலும் நன்றாகத்தான் போனது. சிங்காரச் சென்னையின் சாலையைப்பற்றி சொல்லவும் வேண்டுமோ? திடீரென்று ஆலயம்மன் கோவில் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டுட்ரா·பிக் போலிஸை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அவர் பங்கிற்கு ஏதோ கத்திவிட்டு வண்டியை எடுக்கச்சொல்லிவிட்டார்.

ஒருவழியாக திருமயிலை வந்ததும் நான் இறங்கிவிட்டேன். Hats off to that lady.

Friday, January 27, 2006

 

RE-MIX SONGS

எங்கு பார்த்தாலும் சமீபமாக ரீமிக்ஸ் பாடல்களாக கேட்டுக்கொண்டிருக்கிறது. குறும்பில் ஆரம்பித்து வரவிருக்கும் திருவிளையாடல் (பெயர் மாருமோ?) வரை பழையத் தமிழ் பாடல்களை தூசித்தட்டி வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ராகமும்,தாளமும் மாற்றியமைத்து ஜிலீரென்று புதிதாக வந்த வண்ணமாக உள்ளது. இதில் யுவனுக்கு கவலையில்லை; பாதிக்கு மேல் தந்தையுடையதாகும். மற்றவர்களுக்கு?

அனைத்து பாடல்களுமே நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால் மெல்லிசை மன்னர் காலத்தில் இருந்தவர்களுக்கு இதில் அவ்வளவாக நாட்டம் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. மாறாக ஏன் இப்படி பழைய பாடல்களை சொதப்புகிறார்கள் என்று கூறுவார்கள். எனக்கு பிடித்த சில ரீமிக்ஸ்கள்...

ஆசை நூறு வகை (குறும்பு), என் ஆசை மன்மதனே (மன்மதன்), தொட்டால் பூ மலரும் (நியூ), அதோ அந்த பறவை (படம் -தெரியவில்லை) துள்ளுவதோ இளமை (சுக்ரன்) வரவிருக்கும் எனக்கு பிடித்த பாடல் - என்னம்மா கண்ணு சொளக்கியமா? (பிரகாஷ்ராஜ், தணுஷ் நடிக்கயிருப்பது). ராயல்டி, காப்பிரைட் போல் வரிகளை எடுத்தாள்வதற்கு பழைய பாடலாசிரியர்களுக்கு எதாவது ரெம்யூனரேஷன் கொடுப்பார்களா?


This page is powered by Blogger. Isn't yours?