Saturday, November 26, 2005

 

Metro Water Vs. Parliament

எழுத படிக்கத் தெரியாதவர்கள்; நான், நீ என்று போட்டி போடுபவர்கள்; குடும்பத்தோடு கோதாவில் இறங்குபவர்கள்; தினந்தோறும் இல்லையென்றாலும் வாரத்தில் இரண்டு நாட்களாவது உண்டு; முண்டியடித்துக்கொண்டு ஓடுவார்கள் - முதலில் இடம் பிடிக்க; தாமதித்தால் ஒரு துளி கூட கிடைக்காது. பார்ப்பதற்கு அநாகரிகமாக இருக்கும்; ஆனால் என்ன செய்வது? சிலரது வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட நிகழ்வு. என்ன புரிந்ததா? குழாய் "அடி" சண்டையைத்தான் சொல்கிறேன்.

மெத்தப் படித்தவர்கள்; தீபாவளி மட்டுமல்லாமல் தினந்தோறும் புத்தாடை அணிபவர்கள்; நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவார்கள்; பாலசந்தர் படங்களில் வருவதுபோல் எல்லோரும் ஒருசேர பேசுவார்கள்; ஒரு முடிவுக்கு வர வெகு நாட்களாகும்; 50% நபர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளிநடப்பு செய்வார்கள்; இதைப் பார்ப்பதற்கும் அநாகரிகமாகத்தான் இருக்கும்; என்ன செய்வது! நம் நாட்டின் பாராளுமன்றத்தின் நிலை ஐ.சி.யு வில் இருப்பதுபோல் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.

Saturday, November 19, 2005

 

Guinness Record

எது எதற்கோ கின்னஸ் ரெக்கார்ட் செய்கிறார்களே; அன்றாடம் சென்னைவாசிகள் ஐம்பது பேர் பயணிக்கக்கூடிய மாநரகப் பேருந்தில் இருநூறு பேருக்கு மேல் பயணிக்கிறார்களே இதை ஏன் கின்னஸ்ஸில் சேர்க்கக்கூடாது? மாநரகப் பேருந்து பயணம் என்பதே ஒரு பிரம்ம பிரயத்தனம்தானே!

நேற்று முன் தினம் கூட்டம் நிறைந்த பேருந்தில் கஷ்டப்பட்டு ஏறி உள்ளே சென்றுவிட்டேன்; பாழாய்ப்போன பயணச்சீட்டு எடுப்பதற்கு காசு கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள்; நான் அடுத்த ஸ்டாப்பில் எறங்குனங்க! வேற யாரிடமாவது கொடுங்க ப்ளீஸ்! என்கின்றனர். ஒரு ஸ்டாப்பிங் கடந்தேவிட்டது; அவரும் இறங்கவில்லை, நானும் பயணச்சீட்டும் வாங்கியபாடில்லை. சார், நீங்க இறங்கனாக்கூட பரவாயில்லை; காசைக் கொடுத்திடுங்க, நான் வாங்கிக்கிறேன்னு சொல்லி காசை ஒரு வழியாகக் கொடுத்துவிட்டு, ஐந்து நிமிடம் கழித்து அவரே சீட்டைக் கொடுத்தார் (அவர் இறங்கவேயில்லை). போனால் போகட்டும் என்று அவருக்கு ஆங்கிலத்தில் நன்றி சொல்லிவிட்டுப் பார்த்தால் பாதி சீட்டுதான் இருக்கிறது; முக்கியமான எண்கள் உள்ள மேல் பகுதியைக் காணவில்லை. யாரை நொந்துகொள்வது?! நம் போறாத வேளை பச்சைக்கிளி பச்சையம்மா காலையில் சொன்னதுபோல ஏதாவது நஷ்டம் ஆனால் என்ன செய்வது? மீண்டும் காசு கொடுத்து முழுமையான பயணச்சீட்டைப் பெற்றேன்.

Wednesday, November 16, 2005

 

WWF - Who will Find?

ஒரு கேம். ஜாக்பாட்டோ, KBCII வோ கிடையாது. கீழே உள்ள புகைப்படத்தை நன்கு பார்த்துவிட்டு நான் எங்கே என்று சொல்பவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.

நிபந்தனைகள்:
1. பதிலை ஈ.மெயில் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.(மெயில் ஐடி - ஆர் ஏ ஜே யு வி ஐ ஜே ஏ ஒய் அட் ஜிமெயில் டாட் காம்)
2. பதில் வந்து சேரவேண்டிய கடைசி தினம் 18 நவம்பர் 2005.
3. ஒருவர் ஒரு பதில் மட்டுமே அளிக்க வேண்டும்.


Image hosted by Photobucket.com

Monday, November 14, 2005

 

Giri Film Comedy

Image hosted by Photobucket.com

தமாஷா மெயில்

வடிவேலுவின் கிரி திரைப்படத்தின் நகைச்சுவையை மனதில் நினைத்துக்கொண்டு மேற்கொண்டு தொடரவும்

சரி, ஒரு ரவுண்ட்தானேன்னு நம்பி ஒரு இண்டர்வியூக்கு போனேன்.
அங்கே அஞ்சு பேருமா..
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாய்ங்க;
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
அப்புறம் 4-வது மாடிக்கு போய் ஆர்டர் வாங்கிக்குங்கன்னு சொன்னாய்ங்க;
சரி நானும் நம்ம்ம்பி 4-வது மாடிக்கு போனேன்
அங்கே எட்டு பேர்மா!
அவிங்களாலே எவ்ளோ முடியுமோ அவ்ளோ கேள்வி கேட்டாய்ங்க.
திடீர்ன்னு ஒருத்தன் HR-க்கு ·போன போட்டு 'மச்சான் ·ப்ரீயா இருந்தா இங்க வாடா! ஒருத்தன் சிக்கியிருக்கான்'னு சொன்னான்;
நானும் எவ்ளோ நேரந்தான் பதில் தெரிஞ்சமாதிரியே நடிக்கிறது!!
அதுல ஒருத்தன் சொன்னான்,
'என்ன கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்; இவன் ர்ரொம்ப நல்லவன்'னு சொல்லிட்டான்மா!?

This page is powered by Blogger. Isn't yours?