Friday, April 01, 2005

 

COMEDIAN

வாழவந்தானைப் பற்றி.....

ராம் திரைப்படத்தில் வரும் வாழவந்தானின் பெயர் 'கஞ்சா கருப்பன்' என்று ஆகிவிட்டது. இவர் ஏற்கனவே பிதாமகன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றியவர். இயக்குநர் பாலாவின் தூரத்து உறவுக்காரர். சிவகங்கையைச் சார்ந்தவர். நடிப்பில் வெளுத்துவாங்குகிறார். இவர் வரும் காட்சிகளெல்லாம் கரவொலியிலும்,சிரிப்பொலியிலும் அரங்கமே அதிர்கிறது.

இவர் பிதாமகனில் நடித்தபொழுதே இயக்குநர் அமீரின் அறிமுகம் கிடைத்ததாம். அப்பொழுதே அமீர் இவரிடம் சொல்லிவிட்டாராம்... என்னுடைய படத்தில் ஒரு காமெடி ரோல் உள்ளது; அதனை நீதான் செய்யவேண்டும் என்று. சொன்னபடியே செய்திருக்கிறார் அமீர். வாழ்த்துக்கள்...

ராமில் அவரின் அறிமுக காட்சியே அமர்க்களப்படுகிறது. குறிப்பாக போலிஸிடம் உதை வாங்கும் காட்சிகள், கதாநாயகியிடம் காசு கேட்கும் இடம், ராம் என்று நினைத்து கட்டையை எடுத்து அவர் மனைவியையே பொளக்கும் காட்சி, ரஹ்மானிடம் சிக்கன் பிரியானி கேட்குமிடம் என்று அனைத்து இடத்திலுமே கரகோஷம் பெறுகிறார்.

என்னுடைய கவலையெல்லாம் - இந்த போட்டி நிறைந்த சினிமா தொழிற்சாலையில் வாழவந்தானை நன்றாக வாழவைக்கவேண்டுமே!! என்பதுதான்.

Comments:
யோவ்,

எதுக்கெல்லாம் கவலைப்படுறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா? ஏன்யா சினிமா பாத்து கெட்டுப் போறிங்க? உனுக்கு இன்னா ஒரு 25,26 வயசு இருக்குமா? கொழுகொழுன்னு அமுல் பேபி மாதிரி கீற. உருப்படியா எதனா படிச்சி முன்னேற வழியப்பாரு. சொம்மா சினிமா பத்தி எதச்னா பெனாத்திக்கினு இருக்காத. அக்காங்.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?